வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என மாவட்ட ஓட்டல்கள், சுற்றுலா, வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் மூடப்பட்டன. தற்போது பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 125 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் நீலகிரி மாவட்ட சுற்றுலா, வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உதகையில் உள்ள ரோஜா பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு மற்றும் முகக் கவசங்களை கொடுத்து வரவேற்றனர்.
மாவட்டத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago