நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி அரிசி ஏலம் நடைபெற உள்ளது, என மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாமக்கல் வள்ளிபுரம் கணவாய்ப்பட்டி பள்ளி அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,350 கிலோ பொதுவிநியோகத் திட்ட குருணை அரிசியை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2020-ம் ஆண்டு பறிமுதல் செய்னர். இந்த அரிசி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இதில் பொன்னி குருணை அரிசி கிலோ ரூ.30 மற்றும் ஐஆர் 20 கிலோரூ.35 என மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தில் பங்கேற்க முன் வைப்புத் தொகையாக குருணை மதிப்பில் 10 சதவீதத்தை நாளை (26-ம் தேதி) மாலை 4 மணிக்குள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் அலுவலகத்தில் செலுத்தி ஒப்புகை ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago