கடலூர் கடல் பகுதியில் நடுக்கடலில் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன்பிடி பணியில் ஈடுபட்ட மீனவர்களை மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படையினர் விரட்டியடித்தனர்.
கடலூர் மாவட்ட கடல் பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை கொண்டு படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக மீன்வளத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மீன்வளத்துறை இணை இயக்குநர் செந்தில் முருகன் உத்தரவின் பேரில் உதவி இயக்குநர் சின்னகுப்பன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன் , கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் விவேகானந்தன், பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
ரோந்துப்பணியின் போது புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலைப் பயன்படுத்தி கடலூர் பகுதியில் நடுகடலில் மீன் பிடி பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட கடலூர் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படை படகுகளை பறிமுதல் செய்ய முயன்ற போது சுமார் 30 சுருக்குமடி படகுகளில் மீனவர்கள் அதிகாரிகளை சூழ்ந்து பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படையினர் கடுமையாக எச்சரித்தனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து சுருக்குமடி வலை படகுகளும் கடலூர் மாவட்ட கடல் பகுதி யிலிருந்து அதிகாரிகளால் விரட் டியடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago