மோகனூர் - நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும், என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது, என சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் ஓ.பி.குப்புதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறையின் மானியக்கோரிக்கையின்போது நாமக்கல் மாவட்டம் மோகனூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் மோகனூர்- பாலப்பட்டி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதால் ஒருவந்தூர், மணப்பள்ளி, செங்கப்பள்ளி ஆகிய 3 நீரேற்றுப் பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்கும். இதுபோல் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேவேளையில் ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு மேல் பகுதியில் மொளசி, சோழசிராமணி, கொக்கராயன்பேட்டை போன்ற இடங்களில் முறையற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றுப் பாசன கிணறுகளுக்கான மின் இணைப்பை துண்டித்து அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago