தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னைத் தமிழில்அர்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 6-ம் தேதி சென்னைகபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் நேற்று தொடங்கியது. கோயில் இரண்டாம் பிரகாரத்தில் சுவாமி முருகன் படம் வைக்கப்பட்டிருந்தது. கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி முன்னிலையில் தெய்வதமிழ் பேரவை நிர்வாகிகள் சார்பில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் கிருஷ்ணமூர்த்தி தீட்ஷிதர், தேவராஜன் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago