நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைத்து 410 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டலக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 430 காசுகளாக இருந்த முட்டை விலை 20 காசுகள் குறைத்து 410 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத் 396, விஜயவாடா 403, ஹொஸ்பேட் 395, பர்வாலா 406, பெங்களூரு 435, சென்னை 450, டெல்லி 420, மும்பை 440, மைசூரு 435, கொல்கத்தா 456 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.118 என பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 என பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago