புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த முடியாது என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கத் தின் மாநிலத் தலைவர் என்.சவுந்தர்ராஜன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த முடியாது என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயி லாக உரை நிகழ்த்தினார்.
அப்போது, தமிழக அரசின் நிதிநிலை சரியில்லை என்பது அவருக்கு தெரியும். ஆனாலும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதியளித்தார்.
அதன்பின்னர் திமுக தேர்தல் அறிக்கையிலும் பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்படும் என தெரி விக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அரசு ஊழியர் களும், ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம்.
ஆனால், சட்டப்பேரவை யில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படாது, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த முடியாது என தமிழக நிதியமைச்சர் கூறியிருப்பது அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
கடந்த 23 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களிடம் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதைக் கொண்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப் படுத்திவிட முடியும். இதனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிடாது.
எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட பெரும் பங்காற்றியவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்பதை நினைவுகூர்ந்து, தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிதியமைச்சரின் தற்போதைய அறிவிப்பு தற்கா லிக அறிவிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள் ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago