மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் - மாட்டுவண்டித் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில் நேற்று மாட்டுவண்டித் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 6 மாத காலமாக வாழ் வாதாரத்தை இழந்து தவிக்கும், மாட்டுவண்டித் தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாக்க, பட்டுக்கோட்டை வட்டம் தொக் காலிக்காடு, சின்ன ஆவுடையார் கோவில், பேராவூரணி வட்டம் பெத்தனாட்சிவயல் ஆகிய இடங்க ளில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தஞ்சாவூர் மாவட்ட மணல் மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகம் முன் பாக காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். முறைசாரா சங்க மாவட்டச் செய லாளர் பி.என்.பேர்நீதிஆழ்வார் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர்எஸ்.தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கள் பட்டுக்கோட்டை எஸ்.கந்த சாமி, பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சுப்பிர மணியன் மற்றும் மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கத்தினர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒருவார கால அவகாசத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் கைவிடப் பட்டது.

எனினும், “மணல் குவாரியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும்” என மாட்டுவண்டித் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்