சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை மத்திய பாதுகாப்பு படையினர் (சிஆர்பிஎப்) 20 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சிஆர்பிஎப் துணை கண்காணிப்பாளர் முகமது பயாஸ், ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் தொடங்கிய சைக்கிள் பயண குழுவினர் மாலையில் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தனர். அவர்களை திருநெல்வேலி மாநகர சட்டம், ஒழுங்கு துணை காவல் ஆணையாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, ஆய்வாளர்கள் ரமேஷ்கண்ணா, பேச்சிமுத்து, டேனியல் கிருபாகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். நேற்று காலையில், திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.
சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு, நோவா விளையாட்டு அகாடமி சார்பில் கேடயம் வழங்கப்பட்டது. நோவா கார்பன்ஸ் நிர்வாக இயக்குநர் அந்தோணி தாமஸ், கால்பந்து பயிற்சியாளர் ஜெயபிரகாஷ், தடகளப் பயிற்சியாளர் மனோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago