ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் உணவுப் பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்கங் களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட வழங்கல் அலுவலர் மணி மேகலை, துணைப் பதிவாளர் (பொது விநியோகம்) முரளி கண்ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘மாவட் டத்தில் புதிய குடும்ப அட்டை கோரிய விண்ணப்பங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி ஒரு வாரத்துக்குள் ஆய்வு செய்து குடும்ப அட்டை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பச்சரிசி, பாமாயில் சில இடங்களில் போதுமானதாக இல்லை என்றும், புழுங்கல் அரசி மட்டுமே கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் இரண்டு வகையான அரிசியையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருப்பு, பாமாயில் உள்ளிட்டவற்றை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ரேஷன் கடை களுக்கு கொண்டு சேர்த்து விட்டால் வாகன செலவும் மிச் சமாகும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago