பொங்கலூரில் 112 பெண்களுக்கு - இருசக்கர வாகனத்துக்கான மானியம் வழங்கல் :

By செய்திப்பிரிவு

உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனத்துக்கான மானியத் தொகை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் பி.வி.கே.என் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்பயனாளிகளுக்கு இருசக்கர வாகனத்துக்கான மானியத்தை வழங்கி பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் 2020-21-ம் நிதி ஆண்டுக்கு 3 ஆயிரத்து 530 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் இருசக்கர வாகனம் கொள்முதல் செய்து மானியம் கோரும் படிவம் வரப்பெற்ற ஆயிரத்து 127 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கலூர் ஊராட்சிஒன்றியத்தில் 129 பேருக்கு இலக்கு நிர்ணயித்து, 112 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.28 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.

தற்போது இருசக்கர வாகனம் பெற்றுள்ள பெண்கள், எரிபொருளை முடிந்த அளவு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். காற்று மாசுபடுவதை தடுப்பதுடன், செலவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். முக்கியத்தேவைகளுக்கு மட்டும் வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன்,மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்