இது குறித்து புலவர் கா.காளிராசா கூறியதாவது: பழங்காலத்தில் தங்கள் அரசர் போரில் வெற்றி பெற வேண்டி கொற்றவை தெய்வம் முன்பாக வீரர்கள் தங்களை பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. இதில் நவகண்டம் என்பது உடலில் 9 இடங்களில் வெட்டிக் கொண்டு உயிரை விடுவர். இந்த வீரர்களை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்படும். இப்பழக்கம் 9-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்தது. முத்துப்பட்டியில் கண்டறியப்பட்ட நவகண்டம் சிலை 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது மூன்றடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் உள்ளது.
தலைமுடி கொண்டை கட்டியவாறு உள்ளது. முகத்தில் மீசை, கழுத்தில் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணம், கையில் கழல் போன்ற ஆபரணம் உள்ளது. மேலாடை தொங்குவதைப் போல் உள்ளது. இடுப்பில் உறையுடன் கூடிய குத்து வாள்,கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும், மற்றொரு கை சிதைந்தும் உள்ளது. கழுத்தில் வலது புறத்தில் இருந்து இடதுபுறமாக கத்தி குத்தியவாறு உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago