நாட்றாம்பள்ளி அருகே பள்ளி சிறுவர்கள் இருவர் உயிரிழந்த வழக்கில் செயற்கை மணல் தயாரித்த புகாரில் தந்தை, மகன் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட செத்த மலைப் பகுதியைச் சேர்ந்த சென்னையன் என்பவரது மகன் ஹரி (14). இவர், பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பச்சூர் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த கனகன் என்பவரின் மகன் தனுஷ் ராஜ் (13). இவர், அதே பகுதியில் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஆடுகளை மேய்க்க அருகே உள்ள காப்புக் காட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
அங்கு நாசர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குன்னிச்சியூர் பகுதியைச் சார்ந்த பார்த்திபன் (35), செயற்கை மணல் தயாரிக்க குளம்போல் குழிகளை அமைத்துள்ளார். மணல் தயாரிப்பு பணிக்காக மின் மோட்டார் பொருத்தியுள்ளார். அருகில், ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் ஹரி, தனுஷ்ராஜ் உள்ளிட்ட 3 பேர் குளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது, மின் கசிவால் குளத்தில் இறங்கி யவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தண்ணீரில் மூழ்கினர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த தொழிலாளர்கள் விரைந்து சென்று மின் மோட்டாரை நிறுத்தி சிறுவர்களை மீட்டனர். ஒருவர் உயிர் பிழைத்த நிலையில், ஹரி, தனுஷ்ராஜ் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், தொழிலாளர்கள் செய்வது தெரியாமல் அங்கிருந்து தப்பியோடினர்.
இரண்டு சிறுவர்கள் உயிரிழந் தது தொடர்பாக நாட்றாம்பள்ளி காவல் ஆய்வாளர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். அதில், செயற்கை மணல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தாக ராஜா (55), அவரது மகன் பிரபு (35) ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பார்த்தீபனை காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago