நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் - நாளை முதல் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

செங்கம் அடுத்த நாகப்பாடியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டுக்கான 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை நாளை (23-ம் தேதி) முதல் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் அ.பிச்சுமணி தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட் டம் செங்கம் வட்டம் நாகப்பாடி கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. முதற்கட்ட கலந்தாய்வின் போது நிரப்பப்பட்ட இடங்கள் போக, மீதமுள்ள காலி இடங்கள் குறித்த விவரங்கள், கல்லூரியின் www.gptctvm.com என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த காலி இடங்களை நிரப்பவிண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி யில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் நாளை (23-ம் தேதி) முதல் நேரில் வந்து விண்ணப் பத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அனைத்து சான்றி தழ்களிலும் தலா 3 நகல்கள் மற்றும் 3 அஞ்சல்வில்லை அளவு புகைப்படங்கள், 3 ஆதார் நகல்கள் மற்றும் வங்கிக் கணக்கு சேமிப்பு புத்தகத்தின் முதல் பக்க 3 நகல்கள் ஆகியவற்றை இணைத்து ஒப்படைக்க வேண்டும்.

கல்லூரி கட்டணம் ரூ.2,352 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள், சான்றொப்பம் பெற்ற நகல் ஜாதி சான்றிதழை கொடுத்து கட்டணம் இல்லாமல் விண் ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்