பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா தலைமையில், மாவட்ட டாஸ்மாக் மதுபான கிடங்கு மேலாளர் அலுவலகத்தில் அனைத்து மதுபானக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. கரோனா தொற்று பரவி வருவதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செல்வராஜ், வட்டாட்சியர் பாரதிவளவன் மற்றும் அனைத்து மதுபான கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago