மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி ஆக.25-ம் தேதி முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்துவது என மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்டக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் எம்.தண்டபாணி தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டத் தலைவர் ப.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், அரசு நீராதாரங்களை கருத்தில் கொண்டு அனைத்து மணல் குவாரிகளையும் தடை செய்திருந்தாலும், மாட்டு வண்டியில் மணல் அள்ள பல்வேறு மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மாட்டுவண்டி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களின ்வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசின் வழிகாட்டுதலுடன் மணல் குவாரிகளை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி கோரி தமிழக முதல்வருக்கு ஆக.25-ம் தேதி கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago