கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோருக்கு ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேலையில்லா இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: கடந்த திமுக ஆட்சியின்போது (2006-2011) பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதோடு, பணி நியமனம் செய்யப்படவில்லை. அதன்பிறகு வந்த அதிமுக அரசு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ததுடன், தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்தது. அதையும் முறையாக நடத்தவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோருக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால், கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago