பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கட்டணமில்லா குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின மாணவ, மாணவிகள் www.training.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியை கட்டணமின்றி பயிலலாம். பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago