பொள்ளாச்சி அடுத்த கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், சரோஜினி தம்பதியரின் 3 வயதுபெண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்தது.
சிறுமியின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆனைமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீஸார், குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாகபதில் தெரிவித்தனர். இதனால்சந்தேகம் வலுத்ததால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரேத பரிசோதனைக்குப் பிறகே குழந்தை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago