கோவை மாவட்டம் அன்னூர்அருகேயுள்ள ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், வி.ஏ.ஓ.வாக கலைச்செல்வி, அவரது உதவியாளராக முத்துசாமி(56) பணியாற்றி வந்தனர்.
இங்கு கடந்த 6-ம் தேதி கோபிராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமி(38), தனது இடம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க வந்தார். அப்போது வி.ஏ.ஒவுக்கும், கோபால்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில், கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியின் காலில் விழுந்த கதறி அழுதார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ மறுநாள் சமூகவலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago