மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு சங்கங்கள் செல்ல கூடாது: சிஐடியூ வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு சங்கங்களை கொண்டு செல்லக் கூடாது என கூட்டுறவு ஊழியர் சங்க சிஐடியூ மாநில பொதுச் செயலர் ஜீவானந்தம் கூறினார்.

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க சிஐடியூ மாவட்ட மாநாடு விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். பின்னர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜீவானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால் ரேஷன் கடை ஊழியர்கள் பணிச் சுமையில் உள்ளனர். எனவே ஒரு கடைக்கு 500 குடும்ப அட்டைகள் மட்டுமே ஒதுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு சங்கங்கள் செல்ல கூடாது. தமிழகத்தில் 18 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில் ரூ.2 ஆயிரம் கோடி வைப்புத் தொகை உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு சங்கங்கள் சென்றால் மக்களுக்கு அப்பணம் திரும்பக் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்