கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - கூடுதலாக ஈர நிலங்களை கண்டறிய அறிவுரை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதலாக ஈர நிலங்கள் உள்ள இடங்களை கண்டறிய வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈர நிலங்கள் பராமரிப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். டிஆர்ஓ., சதீஸ், மாவட்ட வன அலுவலர் பிரபு, உதவி வன பாதுகாவலர் கார்த்திகேயினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

மாநிலம் முழுவதும் 100 ஈர நிலம் காடுகள் உருவாக்குவதற்கு முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெனுகொண்டாபுரம், ஓசூர் ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி ஆகிய 3 ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில், முதல்கட்டமாக போச்சம்பள்ளி வட்டம் பெனுகொண்டாபுரம் ஏரியை பராமரிப்பதற்கு அறிவிப்பு ஆணை வெளியிடப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் கூடுதலாக ஈர நிலங்கள் உள்ள இடங்களை கண்டறிய வேண்டும் என்றார்.

இதில், மாவட்ட சுற்றுச்சூழுல் செயற்பொறியாளர் செந்தில் குமார், பொதுப்பணித்துறை (நீர்வளம்) குமார், உதவி திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE