வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர் களுக்கான ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் இணையவழியில் நேற்று நடைபெற்றது. இதற்கு, முத்துரங்கம் அரசினர் கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார்.
‘கற்றல் விளைவுகள் - அடிப்படை பாடத்திட்ட கட்டமைப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பெங்களூரு புனித ஜோசப் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியர் சையத் வாஜித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். இந்த கருத்தரங்கு பேராசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் என முத்தரங்கம் கல்லூரி முதல்வர் மலர் கருத்து தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago