இந்திய - ரஷ்ய அமைதி, நட்புணர்வு, ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல்கலாச்சார மையத்தில் நேற்றுதொடங்கியது.
இதை தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ், தமிழக சுற்றுலாத் துறைமுதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானியும், பிரம்மோஸ் மைய நிறுவனருமான ஏ.சிவதாணுப் பிள்ளை பேசும்போது, ‘‘1971-ம் ஆண்டு வங்கதேசபிரிவினையின் போது பெரும்பாலான நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தன.
அந்த சூழலில் ரஷ்யா நமக்குஆதரவு அளித்ததுடன், இந்திய - ரஷ்ய அமைதி, நட்புணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அன்றுமுதல் தொடர்ந்து நமக்கு ஆதரவாக இருக்கிறது. இந்திய - ரஷ்ய நல்லுறவானது தொடர்ந்து நீடிக்கும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய - ரஷ்ய தொழில் வர்த்தக சபைநிறுவனர் வி.எம்.லட்சுமி நாராயணன், பொதுச்செயலாளர் தங்கப்பன், ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் (விற்பனைப் பிரிவு)டி.ராஜ்குமார் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் இந்திய- ரஷ்ய தொழில் வர்த்தக சபைஇணைந்து நடத்தும் இக்கண்காட்சி வரும் 22-ம் தேதிவரை நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago