கரோனா சூழலிலும் சான்றிதழ் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைதொடர்கிறது. கூடுதல் அதிகாரிகளைநியமித்து பணிகளை விரைவுப்படுத் துமா புதுச்சேரி அரசு என்ற கேள்வி யுடன் பலரும் காத்துள்ளனர்.
புதுச்சேரியில் வருவாய்துறை மூலம் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த வருவாய் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் 2017-ம் ஆண்டு முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு, மருத்துவம், பள்ளி, கல்லூரி, பல் கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க மாணவர்கள் வருவாய்துறையின் ஆன் லைன் மூலம் புதிதாக இந்த ஆண்டில் எடுக்கப்பட்ட சாதி, குடியிருப்பு சான் றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதற்காக வருவாய்த்துறை அலுவலகங்களை நாடும்போது அங்கு அதிகாரிகள் குறைந்தளவே உள்ளதால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ராஜாங்கம் கூறுகையில், “ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போதெல்லாம் சான்றிதழுக்காக மாணவர்களும், பெற்றோரும் வரு வாய்த்துறை அலுவலகங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. கரோனா காலத்தில் சிறிய இடத்தில் 200 பேர் வரை தினமும் கூட வேண்டியுள்ளது. அதே நேரத்தில் வருவாய்துறை அதிகாரிகள் அலுவலகங்களில் இல்லாத சூழலும் நிலவுகிறது. சான்றிதழ் தர தனியாக முகாம் நடத்தலாம் அல்லது பள்ளிகளிலேயே தர ஏற்பாடு செய்யலாம். மக்களை அலைக்கழிக்கும் போக்கை நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கூறுகையில், “வருவாய் துறையில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து அல்லது படிப்பு சம்பந்தமாக மட்டும் சான்றிதழ்கள் வழங்க தனி அதிகாரிகளை நியமித்து விரைவாக சான்றிதழ்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சாதி என்பது மாறப்போவதில்லை.
ஆகவே நேர விரயத்தை குறைக்க ஆயுள் முழுவதும் பயன்படுத்தும் நிரந்தர சாதி சான்றிதழ்களை சட்டத்திற்கு உட்பட்டு வழங்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்தாலும் நேரடியாக சென்று அலைந்து திரிந்துதான் சான்றிதழ்களை பெற வேண்டிய நிலை உள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக கவனம் செலுத்தி சிரமம் இல்லாமல் ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “வருவாய்த்துறையினர் மூலம் தரப்படும் குடியிருப்பு சான்று, வரு மான சான்று, சாதி சான்று ஆகியவை பெற சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago