சத்தியமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் - வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் புகார் :

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் விழுப்புரம் ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்தில் நாள் கணக்கில் கொள்முதல் செய்யாமல் உள்ளனர். விவசாயிகள் பெயரில் போலியாக வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட் டைகள் யாருடையது என ஆட்சியர் கேட்டார். அதற்கு விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகள் தான் என கூறினர். அந்த நெல் மூட்டைகள் விவசாயிகளின் மூட்டைகள் தானா என விசாரணை செய்ய வேண்டும். விவசாயிகளின் நெல் மூட்டைகள் இல்லை என தெரிந்தால் நெல் மூட்டைகளுக்கு சீல் வைக்க வேண்டும். போலியான பெயரில் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மீதும் நட வடிக்கை எடுக்குமாறு செஞ்சி வட் டாட்சியருக்கு ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை உடனடியாக ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுரை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்