புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசின் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி தவிர்த்து மீதமுள்ள 7-ம் தனியார் கல்லூரிகள்.
இவற்றில் 3 கல்லூரிகள் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளாகவும், 4 கல்லூரிகள் நிகர்நிலை கல்லூரிகளாகவும் உள்ளன. இதில் தனியார் நிகர் நிலை மருத்துவக் கல்லூரிகள் ஒரு இடத்தைக்கூட புதுச்சேரி அரசுக்கு ஒதுக்குவதில்லை.
மொத்தம் 1,579 மருத்துவ பட்டப்படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில், 363 மருத் துவ இடங்கள் மட்டுமே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கின்றன. மீதமுள்ள 1,217 மருத்துவ இடங்கள் வெளிமாநில மாணவர்களுக்கே கிடைக்கின்றன. எனவே, தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை உடனடியாக புதுச்சேரியில் அமல்படுத்தி, அதன் ஷரத்துக்களின்படி நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் தனி யார் மருத்துவக் கல்லூரிகளும் புதுச்சேரியைச் சேர்ந்த மாண வர்களுக்கு 50 சதவீத இடங்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago