60 வயது கடந்தவர்களை அரசு வழக்கறிஞராக நியமிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு : உள்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மாவட்ட நீதிமன்றங்களில் 60 வயது கடந்தவர்களை அரசு வழக் கறிஞர்களாக நியமிக்க தடை விதிக்கக்கோரிய வழக்கில் உள் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாகமலை புதுக் கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் நியமனங்கள் சட்ட விதிமுறைகளை பின் பற்றி நடைபெறுவதில்லை. ஆட்சிக்கு வரும் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களே அரசு வழக்கறிஞர்களாக நிய மிக்கப்படுகின்றனர். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சார்ந்த கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் மீது ஆர்.கே.நகர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் சார்ந்த கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், அவர்கள் சார்பில் வேறு வழக்கறிஞர்களை ஆஜராக செய்து அரசிடம் ஊதியம் பெற்று வந்தனர்.

மாவட்ட நீதிமன்றங்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக்கூடாது என்பது விதியாகும். தற்போது இந்த விதியை மீறி 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் தகுதி அடிப்படையில் அரசு வழக் கறிஞர்களாக நியமிக்கலாம் என கூடுதல் தலைமை செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜூலை 27-ல் கடிதம் அனுப்பியுள்ளார்.

மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிவடைந்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்களுக்கு திமுக வழக்கறிஞர்கள் கொண்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கண் துடைப்புக்காக வழக்கறி ஞர்களிடம் விண்ணப்பம் பெற்று வருகின்றனர். விரைவில் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த கடிதம் ஆளுநரின் அனுமதி பெறாமல் பிறப்பிக் கப்பட்டுள்ளது. எனவே 60 வயது கடந்தவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க அனுமதி வழங்கி ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ரத்து செய்து, மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்காக தனி விதிகளை உருவாக்கி, அதனை பின்பற்றி நியமனங்களை மேற்கொள்ளவும், அதுவரை கடிதத்தை செயல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக உள்துறை செயலர், கூடுதல் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசா ரணையை 6 வாரங்களுக்கு நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்