ஆடி கடைசி வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் :

By செய்திப்பிரிவு

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கோயில் வாசல்களில் நின்று வழிபட்டனர்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சேலம் மாவட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டாக ஆடிப் பண்டிகை கொண்டாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் கோயில்களில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் பலரும் கோயில்களுக்கு வெளியே நின்று வழிபட்டனர்.

இந்நிலையில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் இன்றி பூசாரிகள் மட்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

சேலத்தில் கோட்டை மாரியம்மன், குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரி அம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாப்பேட்டை பலப்பட்டறை மாரியம்மன் கோயில், புத்துமாரியம்மன் கோயில், சஞ்சீவிராயன்பேட்டை காளியம்மன் கோயில், அன்னதானப்பட்டி மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோயில் என மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்