மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த கடவாசல் கிராமத்தில், விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சார்பில், உலக கைம்பெண்கள் தின விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, சங்க நிர்வாகக் குழு துணைச் செயலாளர் மஞ்சுளா தலைமை வகித்தார். செல்வராணி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் விஜயேஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர். விழாவில், கணவரை இழந்த பெண்களை பாதுகாக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அரசு மற்றும் கோயில் நிலங்களில் விவசாயம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்.
முதல்வர் அறிவித்ததுபோல, கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்க வேண்டும். கணவரை இழந்தவர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டங்களில் கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
கோயில் நிலம், புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுககு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago