கீச்சாங்குப்பத்தில் கஜா புயலால் வலுவிழந்த அலை தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, நாகை மாவட்ட இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் கீச்சாங்குப்பம் ராஜேந்திரன் நாட்டார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாகை வட்டம் கீச்சாங்குப்பத்தில் அதிகளவில் உயிரிழப் புகள் நேரிட்டன.
தொடர்ந்து, அப்போதைய குடிய ரசுத் தலைவர் அப்துல்கலாம் வந்து, கீச்சாங்குப்பத்தில் இறந்தவர்களின் நினைவாக 600-க்கும் மேற்பட்ட மரக்கன் றுகளை நட்டார். ஆனால், இப்பகுதியில் அலை தடுப்புச் சுவர் இல்லாததால், அப்துல்கலாம் நட்ட மரக்கன்றுகளில் ஒன்றுகூட கடல் அரிப்பிலிருந்து தப்ப முடிய வில்லை.
இதைத் தொடர்ந்து, மீனவ கிராம மக்களின் வலியுறுத்தலின்பேரில், கீச்சாங்குப்பத்தில் அலை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. இதனால், இயற்கை பேரிடர் காலங்களில் கீச்சாங்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மீன் வளர்ச்சிக் கழக டீசல் பங்க், தமிழ்நாடு அரசு மீன்வள பல்கலைக்கழகத்தின் மீன் உணவு மதிப்புக் கூட்டும் கல்லூரி, கீச்சாங்குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவை காப்பாற்றப்பட்டன. 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் வீசிய கஜா புயலால், கீச்சாங்குப்பத்தில் உள்ள வீடு உள்ளிட்ட உடைமைகள் காப்பாற்றப்பட்டதுடன், ஒரு உயிர்கூட பறிபோகவில்லை.
ஆனால், கஜா புயலால் இந்த அலை தடுப்புச் சுவர் பாதிக்கப்பட்டு, வலுவிழந்த நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த அலை தடுப்புச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக, நாகை மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, கீச்சாங்குப்பத்தில் உள்ள அலை தடுப்புச் சுவரை சீரமைக்க ரூ.20 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் உடனடியாக அலை தடுப்புச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago