புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் - ஆவணி திருவிழா கொடியேற்றம் :

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூரை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக் கம். அதன்படி, நிகழாண்டு ஆவணி திருவிழாவையொட்டி நேற்று கொடிமரத்துக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய் யப்பட்டு, தீபாராதனை காண் பிக்கப்பட்டது. பின்னர், வேதமந் திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக பக்தர்களின்றி கொடி யேற்று விழா எளிமையாக நடை பெற்றது.

ஆவணி முதல் வார ஞாயிற் றுக்கிழமையான ஆக.22-ம் தேதி சிம்ம வாகனத்திலும், 2-ம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆக.29-ம் தேதி அன்னவாகனத்திலும், 3-வது ஞாயிற்றுக்கிழமையான செப்.5-ம் தேதி சிம்மவாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் புறப்பாடுகள் அனைத் தும் கோயிலுக்குள்ளேயே நடை பெறும். விழாவில், நாளை(ஆக.15) முத்துப்பல்லக்கு, ஆக.17-ம் தேதி விடையாற்றி நடைபெறுகின்றன. செப்.12-ம் தேதி கோயில் வளாகத்தில் தேரோட்டமும், செப்.14-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும், தெப்பத்திருவிழா நடைபெறாது என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE