சாலை, குடிநீர் வசதியைக் கண்காணிப்பது மட்டுமே மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களின் வேலை என்று இல்லாமல், தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் பாடுபட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஊராட்சி யின் சாதாரணக் கூட்டம், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங் கலம் பாலு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. துணைத் தலைவர் சேகர் பெரியபெருமாள், ஊராட்சி செயலாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் அவரவர் வார்டுகளின் அடிப் படைத் தேவையான குடிநீர், சாலை வசதிகளை முன்னிருத்திப் பேசினர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு பேசியது:
மாவட்ட கவுன்சிலர்கள் தெரி வித்த கோரிக்கைகள் தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும். சாலை, குடிநீர் வசதிகளை கண்காணிப்பது மட்டுமே மாவட்ட கவுன்சிலர்களின் பணி அல்ல. தமிழக அரசின் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படும் விதை, ரசாயன உரம், பசுந்தாள் உரங்கள் போன்றவை விவசாயி களுக்கு நேரடியாக கிடைப் பதற்கு கவுன்சிலர்கள் பணியாற்ற வேண்டும்.
மேலும், வெளிமாவட்டங் களிலிருந்து திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் திட்டம் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்குதல் உட்பட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து நாள்தோறும் ஆட்சியர் செய்திகளை வெளியிட்டு வருகிறார். இதையெல்லாம் தெரிந்துகொண்டு, அவரவர் பகுதியில் உள்ள மக்களுக்கு அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் பணியிலும் கவுன்சி லர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ரூ.3.5 கோடிக்கும், 15-வது மத்திய நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ.2.42 கோடிக்கும் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago