காரைக்கால் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் காரைக்கால் மாவட்டத்தில் அவ்வப்போது தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி ஆகிய 14 இடங்களில் 2 நாள் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இம்முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மேலும், மக்கள் அதிகமாக தடுப்பூசி போடாத பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. காரைக்கால் வண்டிக்காரத் தெருவில் வீடு வீடாகச் சென்று, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியர் அர்ஜூன் சர்மா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago