கோவில்பட்டியில் பாரபட்சமின்றி - ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : கோட்டாட்சியரிடம் வியாபாரிகள் மனு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தி வியாபாரிகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவில்பட்டி பசுவந்தனை சாலை வியாபாரிகள் சங்கத்தினர், அதன் தலைவர் பேச்சிப்பாண்டியன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கோவில்பட்டி பசுந்தனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் வரும் 17.08.2021 அன்று அகற்றப் போவதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றும்பணிக்கு அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்போம். ஆக்கிரமிப்பு அகற்றும்போது எந்தவித பாகுபாடும் இல்லாமல், அரசியல்வாதிகள், தனிநபர், சமுதாயங்களுக்கு அடிபணியாமல் சட்டத்தின் படி நீதியை கடைபிடித்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.

சாலையின் இருபுறமும் கட்டிடங்கள், மதில் சுவர்கள், கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் போன்றவை சாலைப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தால் அவைகளை பாகுபாடு இல்லாமல் அகற்ற வேண்டும்.

சாலையோரம் உள்ள நடைபாதை கடைகள், பந்தல்கள், விளம்பர பதாகைகள், தள்ளு வண்டி கடைகள் போன்றவற்றை மட்டும் அகற்றிவிட்டு கட்டிடங்களை அகற்றாமல் சென்றால் அது சட்டப்படி குற்றம் ஆகும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்