கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நாளை சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.
கரோனா கட்டுப்பாடுகளால் சுதந்திரதினவிழா கலைநிகழ்ச்சிகள் இன்றி எளிமையான முறையில் நடத்தப்படுகிறது. போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் சந்தேகத்துக்கிடமாக தங்கும் நபர்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தர விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் பரவலாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல்நீரோடி வரையிலான கடல் பகுதிகள்மற்றும் கடலோர சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago