கரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த - அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் : வருவாய் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு பணியில் உயிரி ழந்த வருவாய்த்துறை அலுவலர் களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் பார்த்திபன், மங்கலபாண்டியன், பாலமுருகன், தமிழ்மணி, செந்தூர்ராஜன், ராஜகோபால், மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.மலை மாவட்டத் தலைவர் தர் வரவேற்றார். வேலை திட்ட அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் முருகையன் சமர்ப்பித்தார்.

செயற்குழுக் கூட்டத்தில், “கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த படி தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 58-ஆக குறைக்க வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா தொற்று காரணமாக பதவி உயர்வுக்கான பயிற்சியில் இருந்து தற்காலிக விலக்கு அளித்து காணொலி வாயிலாக பயற்சி அளிக்க வேண்டும், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் பதவி உயர்வை வழங்க வேண்டும், முதல்வர் உறுதியளித்தபடி புதிய மாவட்டங்கள், கோட்டங்கள், வட்டங்கள், உள் வட்டங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளை உருவாக்க வேண்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் அமைச்சர்களை வரும் 18-ம் தேதி சந்தித்து முறையிடுவது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், மாநிலப் பொருளாளர் சோம சுந்தரம் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்