கோயில் கோபுரம் சேதம் - வந்தவாசி அருகே பொதுமக்கள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

வந்தவாசி அருகே கோயில் கோபுரத்தை சேதப்படுத்திய வர்களை கைது செய்யக் கோரி இந்து அமைப்பினர் மற்றும் பொது மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண் குன்றம் கிராமத்தில் உள்ள சுமார் 1,400 அடி உயர தவளகிரி மலை மீது தவளகிரீஸ்வரர் கோயில், விநாயகர் கோயில் உள்ளிட்டவை உள்ளன. இதில், விநாயகர் கோயில் கோபுரத்தை மர்ம நபர்கள் இடித்து சேதப்படுத்தியது நேற்று பிற்பகலில் கிராம மக்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, கோயில் கோபுரத்தை சேதப்படுத்தியவர் களை கைது செய்யக் கோரி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வெண்குன்றம் கூட்டுச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தெற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கோயில் கோபுரத்தை சேதப்படுத்தி யவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் இதே கோயில் கோபுரத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்