மாற்றுத்திறனாளி மாணவர்கள் - உதவித்தொகை கோரி : விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2021-22 -ம் கல்வி ஆண்டுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1,000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும் டிப்ளமோ படிப்புக்கும் ரூ.4 ஆயிரம், இளநிலை பட்டப்படிப்புக்கு ரூ.6 ஆயிரம், முதுநிலை பட்டப்படிப் புக்கு ரூ.7 ஆயிரம் என வழங்கப் படும். அதேபோல், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும் டிப்ளமோ படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம், இளநிலை படிப்புக்கு ரூ.5 ஆயிரம், முதுநிலை படிப்புக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்