குடிபோதையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கேட்டு நச்சரித்த விவகாரம் தொடர்பாக இருதரப்பு மோதலில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தின்போது வேடிக்கை பார்த்தவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்ததையடுத்து, கொலை வழக்கு பதிந்து பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). விசைத்தறி தொழிலாளி. இவர், கடந்த 1-ம் தேதி மகாலட்சுமி நகர் அருகே உள்ள மைதானத்தில் மது அருந்திவிட்டு, மற்றொரு தரப்பினரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலையை கேட்டு நச்சரித்துள்ளார். அங்கிருந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் மணிகண்டனை தாக்கியதால் இருதரப்பு மோதலாக மாறியது.
அப்போது மணிகண்டனுக்கு ஆதரவாக அங்கு வந்த பிரபு, கவுண்டம்பாளையம் சாலையில் வேகமாக காரை ஓட்டி, அங்கு நின்று கொண்டிருந்த சங்கரலிங்கம் என்பவர மீது இடித்ததில் 200 மீட்டர் தூரம் அவர் இழுத்து செல்லப்பட்டார். பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி சங்கரலிங்கம் (22) நேற்று உயிரிழந்தார். ஏற்கெனவே கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்திருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததையடுத்து, பிரபு, கதிர், மணிகண்டன், கர்ணன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago