விழுப்புரம் அருகே பள்ளியில் காவலாளியை கட்டிப்போட்டு கணினி திருட்டு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் காவலாளியை கட்டிப்போட்டு பொருட்கள் திருடப்பட்டன.

விழுப்புரம் அருகே பேரங்கியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் காவலாளி முத்துகுமரன்(34) நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தில் படுத்து இருந்தார். நள்ளிரவில் அடையாளம் தெரியாத 3 பேர் பள்ளிக்குள் நுழைந்து முத்துகுமரனை தாக்கி, கட்டிப்போட்டனர். பள்ளியில் இருந்த 2 கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடி சென்றனர். நேற்று காலை வழக்கம் போல முத்துகுமரன் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி புவனா பள்ளிக்கு வந்தபோது, முத்துகுமரன் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். உடனே அவரின் கட்டுக்களை அவிழ்த்து, கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். இத்தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்