ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் : மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் ஆட்சியர் பேசியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் சிகிச்சை பெறுபவர்களின் வீடுகளுக்கே சென்று மருத் துவப் பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து வழங்கப்படும். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடுகளுக்கே சென்று இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) செய்யவும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்ய வேண்டியவர்களுக்கு நடமாடும் டயா லிசிஸ் இயந்திரம் மூலம் இலவச டயாலிசிஸ் செய்யப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயி னால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் 50,273 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் இவர்கள் சிரமமின்றி மருத்துவ சிகிச்சை பெறுவர். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் ஒரு மருத்துவக் குழு வீதம், அவர்களுக்கான வாகனங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும், ஒரு இயன் முறை மருத்துவர், ஒரு செவிலியர், மகளிர் நல தன்னார்வலர்கள் இடம் பெறுவர் என்றார்.

இதேபோல் தேனி மாவட்டம் கடமலைக் குண்டுவில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட தொடக்க விழா நடந்தது. ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி எம்எல்ஏ ஆ.மகாராஜன் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் கடமலைக்குண்டு - மயிலாடும் பாறை ஒன்றியத்தில் தொற்றா நோயால் பாதிக்கப்பட்ட 2,750 நோயாளிகளின் வசிப்பிடங்க ளுக்கே சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்