சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே வாரம் ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் இக்கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சிக்குட்பட்ட கோலாந்தியில் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக 3 இடங்களில் தெருக்குழாய்கள் அமைக்கப்பட் டுள்ளன. வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதால் பல மணி நேரம் காத்திருந்து கிராம மக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் திருவாசகம் கூறியதாவது:
ஜல்சக்தி திட்டத்தில் ரூ.46 லட்சம் செலவில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஆழ்துளை கிணறும் அமைக் கப்பட்டுள்ளன.
இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. எனினும், இந்த ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் நீர் உவர்ப்பாக இருக்கிறது. எனவே, தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் இயந்திரத்தை நிறுவ அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago