சிவகங்கை மாவட்டத்தில் 4 கூட்டுறவு மருந்தகங்கள் திடீரென மூடப்பட்டதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பாம்கோ கூட்டுறவு நிறுவனம் சார்பில் காரைக்குடியில் 2, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனத்தில் தலா ஒன்று என 5 மருந்தகங்கள் செயல்பட்டு வந்தன. இங்கு மற்ற தனியார் மருந்தகங்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை விலை குறைவாக விற்கப்பட்டது. இதனால் மக்கள் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டையில் உள்ள 4 மருந்தகங்கள் திடீரென மூடப்பட்டன.
இது குறித்து கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சிலர் கூறியது:
தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்பட்டதால், கூட்டுறவு மருந்தகங்கள் மக்க ளிடம் வரவேற்பை பெற்றன. காலப்போக்கில் தேவையான மருந்துகளை வாங்கி வைக்கா ததால் விற்பனை குறைந்தது. தற்போது திடீரென இந்த மருந் தகங்களை மூடிவிட்டனர்.
ஐந்து மருந்தகங்களுக்கும் ரூ.50 லட்சம் டெபாசிட் செலுத்தி கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் மாதந் தோறும் வாடகையாக மட்டும் ரூ.1 லட்சத்துக்கு மேல் வழங் கப்படுகிறது என்றனர்.
இது குறித்து பாம்கோ கூட்டுறவு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘திருப்புவனத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago