திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்ட காவல் சரகத்தில், கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மன்னார்குடி உட்கோட்ட காவல் சரகத்தில், கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிகரித்துள்ளதாக தெரிய வரு கிறது.
தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக வட்டிக்கு பணம் வாங்கும் ஏழை, எளிய மக்கள் அதிக வட்டி கொடுக்க முடியாமலும், அதைப் பற்றி புகார் தெரிவிக்க பயந்துகொண்டும் உள்ளனர். இதனால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர், தஞ்சை சரக துணைத் தலைவர், திருவாரூர் காவல் கண்காணிப் பாளர் ஆகியோரின் அறிவுறுத் தல்படி, மன்னார்குடி பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக் கும் நபர்கள் கண்காணிக்கப் பட்டு வருகின்றனர்.
மேலும், இதுதொடர்பாக பாதிக்கப்படும் நபர், எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி புகார் அளித்தால் உரிய விசா ரணை மேற்கொண்டு, கந்து வட்டி வாங்கும் நபர்கள் மீது கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், புகார்தாரர்களுக்கும் உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago