திசையன்விளையில் 5 கடைகளில் ரூ.1 லட்சம் திருடிய நபரை போலீஸார் தேடி வருகிறார்கள். அந்த நபர் நைட்டி அணிந்துவந்து திருட்டில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
திசையன்விளையிலுள்ள 2 வணிக வளாகங்களில் மளிகைமற்றும் நகை கடைகள் உள்ளன.நேற்று காலை கடைகளை திறக்கவந்தபோது 5 கடைகளில் அடுத்தடுத்து பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இன்ஸ்பெக்டர் ஜமால் தலைமையிலான போலீஸார், தடயவியல் நிபுணர்களுடன் அங்குவந்து விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த நபர் முகமூடி மற்றும் நைட்டி அணிந்திருந்தார். 5 கடைகளில் இருந்தும் ரூ.1 லட்சத்துக்குமேல் ரொக்கம் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago