பாளை மார்க்கெட் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்க எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி மற்றும் வேன் ஓட்டுநர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மார்க்கெட்டிலுள்ள கடைகளை இடித்துவிட்டு 3 தளங்களுடன் கடைகள்அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள காய்கறி கடைகள் அருகிலுள்ள பழைய காவலர் குடியிருப்பு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்க திட்டமிட்டு அதற்கான தளவாடப் பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரும், சுமை ஆட்டோ, வேன் ஓட்டுநர்களும் தர்ணாவில் ஈடுபட்ட னர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரம்மநாயகம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார், வேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்ரீன் முகமது, சுமை ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்