2 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட - நாராயணி மருத்துவமனை : மருத்துவ குழுவினருக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

 நாராயணி மருத்துவமனை இருதயவியல் துறையில் 2 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

வேலூர் அடுத்த புரம் நாராயணி மருத்துவமனையில் இருதயவியல் மற்றும் இருதய சிகிச்சை பிரிவில் 2,000 ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்ச்சிக்கு இருதயவியல் துறையின் மருத்துவர்கள் டாக்டர் சுப்ரங்ஷூதே, டாக்டர் ஜாசிம் முகமது, டாக்டர் ரீனஸ் டெமெல் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி பேசும்போது, ‘‘இங்கு நடைபெற்றுள்ள 2,000 அறுவை சிகிச்சையில் 80 சதவீதம் அறுவை சிகிச்சைகள் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்துள்ளோம்.

இதன்மூலம் பயனாளிகளின் குடும் பத்தினர் நம் மீது வைத்த நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் சுப்ரங்ஷூதே, டாக்டர் ஜாசிம் முகமது, டாக்டர் ரீனஸ் டெமெல் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும்வகையில் ரூ.5,999 மதிப்பிலான சிறப்பு இருதய பரிசோதனையை ரூ.1,999 சலுகை கட்டணத்தில் செய்துகொள்ளலாம். இதற்காக, வரும் 31-ம் தேதி வரை 73583-87148 என்ற எண்ணில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் கீதா இனியவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பொதுமக்கள் பயன்பெறும்வகையில் ரூ.5,999 மதிப்பிலான சிறப்பு இருதய பரிசோதனையை ரூ.1,999 சலுகை கட்டணத்தில் செய்துகொள்ளலாம். இதற்காக, வரும் 31-ம் தேதி வரை 73583-87148 என்ற எண்ணில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்