கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம் :

குமாரபாளையம் அருகே பொதுப்பணித்துறை சார்பில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.

குமாரபாளையம் அடுத்த தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பாசன ஆதாரமாக மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் உள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிரதான வாய்க்காலில் வரும் தண்ணீர் கிளை வாய்க்கால்களில் திருப்பி விட்டால்தான் அனைத்து விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியும்.

இந்நிலையில், கிளை வாய்க்கால் புதர் மண்டி காணப்படுவதால் வாய்க்காலில் தண்ணீர் நீண்ட தூரம் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, செடிகளை அகற்றி தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தட்டான்குட்டை ஊராட்சி ஒட்டன்கோவில் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் மூலம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE