ஊதிய மாற்றத்தை அமல்படுத்தக் கோரி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் :

By செய்திப்பிரிவு

ஊதிய மாற்றத்தை அமல்படுத்தக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 2500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, கடந்த 9 ஆண்டுகளாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் அறிவிக்க வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றத்தை அறிவித்தனர். மற்ற ஊழியர்களுக்கு இதுநாள் வரை ஊதிய மாற்றம் அறிவிக்கவில்லை. இக்கோரிக்கைக்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் பணிபுரியும் இடங்களில் கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்